Tuesday, July 30, 2013
Saturday, July 27, 2013
தேன்
தெனமும் தேனைக் குடிச்சாப் போதும் -- வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
''என்ன வாசம்பா, முகமெல்லாம் வாடிப்போயிருக்கு'' - அம்மணி அக்கறையாய் கேட்க,
''அன்னம்மா வீட்டுக் கல்யாணத்துல வேலை செஞ்சதோட அலுப்பு அம்மணி. மூணு நாள்
தொடர்ந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டது வயித்தை என்னமோ பண்ணுது.''
''அதானே பார்த்தேன்... பந்தி பரிமாறினதுலேர்ந்து வெத்தலைப் பாக்கு
கொடுத்து வழி அனுப்பற வரைக்கும் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு
செஞ்சேல்ல... அதான் இப்பிடி.''
''உடம்புக்குத்தானே வயசு, தவிர
மனசுக்கு இல்லையே. மலையே விழுந்தாலும் தலையால தாங்கணும் அம்மணி.
அன்னம்மாவுக்கும் நம்மளைவிட்டா யார் இருக்கா?''
''சரி... சரி...
கவலைப்படாதே. அய்யனாரு குடுத்த தேன் இருக்கிறப்ப, அலுப்பு, கொழுப்பு
எல்லாமே ஓடிரும்டி. அத்தனையும் உடம்புக்கு சத்து. மனசோட உடம்பும் இளமையா
இருக்க, தெனமும் தேனைக் குடிச்சாப் போதும். அதுலயும் நாப்பது வயசுக்கு மேல,
தினமும் தேன் சாப்பிடறது ரொம்பவே நல்லது. படுத்த படுக்கையாக் கிடக்கறவங்க,
பால்ல கொஞ்சம் தேன் கலந்து குடிச்சிட்டு வந்தா, சீக்கிரமே தெம்பாகி,
சுறுசுறுப்பா எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுவாங்க. கொம்புத் தேன், மலைத் தேன்,
குறிஞ்சித் தேன்னு தேன்ல அறுபது வகை இருக்கு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும்
ஒவ்வொரு சிறப்புக் குணம் இருக்கு வாசம்பா. தேன்ல இருக்குற சர்க்கரை ரத்த
ஓட்டத்தை சீராக்குறதால உடம்புல களைப்பே தெரியாது.''
''குமட்டல்,
வாந்திகூட இருக்கே... அதுக்கு என்ன செய்றது?'' என்ற வாசம்பாவிடம், ஒரு
ஸ்பூன் தேனில், எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டு தண்ணீர் சேர்த்துக்
கொடுத்த அம்மணி, ''வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலைவலினு எல்லாமே
சரியாப்போயிரும்'' என்றதும் வாங்கிக் குடித்தாள் வாசம்பா.
''தேன் உடம்பு எடையைக்கூட குறைக்கும்னு சொல்றாங்களே, அது உண்மையா அம்மணி?''
''தேன், கொழுப்பைக் கரைச்சிடும். தேன்ல வெந்நீர் கலந்து குடிச்சா, பருத்த
உடம்பு மெலிஞ்சு, ஊளைச்சதை குறைஞ்சு உடல் உறுதியாகிரும். இஞ்சியை சாறு
பிழிஞ்சு தேன் விட்டுக் கலந்து சூடுபடுத்திட்டு, ஆறவைக்கணும். இதுகூட
வெந்நீர் கலந்து, காலைச் சாப்பாட்டுக்கு முன்னால ஒரு கரண்டியும்,
சாயாங்காலம் ஒரு கரண்டியும் குடிச்சிட்டு வந்தா, 40 நாள்ல தொப்பை
கரைஞ்சிடும். வெங்காயச் சாறுல, தேன் கலந்து சாப்பிட்டா கண்பார்வை
பிரகாசமாத் தெரியும். பார்லி கஞ்சியை வடிகட்டி, அதுல தேன் கலந்து குடிச்சா,
இருமல், சளித் தொல்லை, நுரையீரல் சம்பந்தமான நோய் எல்லாம் ஓடிருடும்.
வயித்துப் புண் இருந்தா, சாப்பாட்டுக்கு முன்னால ரெண்டு கரண்டித் தேனைத்
தொடர்ந்து சாப்பிட்டு வர, சீக்கிரமே குணமாகும்'' என்றபடியே தேன் பாட்டிலை
அலமாரியில் வைக்கப் போனவள், அது தவறிக் கீழே விழுந்து கையெல்லாம் வழிய, அதை
அப்படியே நக்கத் தொடங்கினாள்.
''தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்னு
சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் இருக்கு அம்மணி. நீ பேசுறதைக்
கேட்கிறப்பவே காதுல தேன் வந்து பாயுது'' என்றாள் வாசம்பா.
''தேனை
வீட்டுக்குக் கொண்டுவர்றதுக்குள்ளயும், வழியிலேயே நிறையப் பேர் கேட்டாங்க.
அதோட மகத்துவத்தை சொல்லிச் சொல்லியே, மொத்தத்தையும் குடுத்திட்டேன்.
உனக்குக் குடுத்தது போக, இருந்த கொஞ்சமும் கொட்டிருடுச்சு. இருக்கிறதையாவது
சாப்பிடுறேன்.''
''ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க. தனக்கு மிஞ்சித்தான் தானம் அம்மணி.'
''ஆசையுள்ளவன் அரை வைத்தியன் வாசம்பா. நலம் விசாரிக்கிறதே நல்ல வைத்தியனுக்கு அழகு.''
''நீ சொல்றதும் சரிதான் அம்மணி. தானமா வந்ததை நாம மட்டும் சாப்பிட்டா, வயித்துவலிதான் வரும்'' என்றாள் வாசம்பா.
''வயித்துவலி வந்தாக்கூட, தொப்புளைச் சுத்தி தேன் தடவினா வலி சட்டுன்னு
சரியாயிரும். கருஞ்சீரகத்தை தண்ணீ விட்டுக் காய்ச்சி, அதுல தேன் கலந்து
சாப்பிட்டுவந்தா, கீழ் வாதம் போயிரும்.''
''தேன்ல இவ்வளவு விஷயம்
இருக்கா? என் எள்ளுப்பாட்டி, சின்ன வயசுல என் தம்பிக்குக் கட்டி வந்தப்ப,
தேனோட சுண்ணாம்பைக் கலந்து குழைச்சு கட்டி மேல பூசினாங்க. கட்டி நல்லாப்
பழுத்து ரெண்டே நாள்ல சரியாயிடுச்சு. இந்தக் காலத்துல மூட்டுவலி, கால்வலி,
வீக்கம், கட்டினு டாக்டர்கிட்ட போனாலே, மருந்து மாத்திரைகளை அள்ளித்
தர்றாங்க.''
''சரியாச் சொன்ன வாசம்பா. மூட்டு வலிக்கும் சிறந்த
மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நல்லாத் தேனைத் தடவி,
தேய்ச்சுவிடணும். கூடவே சாப்பாடு சாப்பிடும்போது, ஒரு ஸ்பூன் தேனையும்
சாப்பிட்டு வந்தா, மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. ரொம்ப
மாத்திரைகளைச் சாப்பிட்டா, குடல் வெந்துபோயிடும். அதுக்குக்கூட தேன்
உதவியாயிருக்கு. மருந்தோட வீரியம் அதிகமா இருந்தா, தேனைப் பால்ல கலந்து
குடிக்கலாம். குடல்ல ஏற்படுற பாதிப்புகளை நிறுத்திடும்.'' மூச்சுவிடாமல்
சொல்லி முடித்த அம்மணியிடம், கல்யாணத் தோரணத்தில் கட்டியிருந்த வாழைப் பூவை
நீட்டினாள் வாசம்பா.
Wednesday, July 24, 2013
ஆப்பிள் சீடர் வினிகர்
உடல் நலனை மேம்படுத்தும் ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்!!!
ஆப்பிள் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ
பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம். ஆனால் புளித்துப் போன ஆப்பிள்
பழத்தை கூட மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம் என்று சொன்னால் நம்ப
முடிகிறதா? ஆம் அது உண்மை தான். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் பழச்
சாற்றில் இருந்து செய்யப்படும் ஒரு வகை வினிகராகும்.
தமிழில்
இதனை அரத்திக்காடி அல்லது அரத்தி நொதிக் காடி என அழைப்பர். இவ்வகை வினிகர்
புளித்து போன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. ஆப்பிள் சீடர்
வினிகரால் புரையழற்சி, காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் குணமாவதால்,
இவ்வகை வினிகரை பல ஆண்டுகளாய் மக்கள் உபயோகித்து வருகின்றனர். ஆப்பிள்
சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன
அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும். இவை
மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை
குறைக்கும்.
ஆப்பிள் சீடர்
வினிகர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நவீன
மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates) கி.மு.400 ஆம் ஆண்டு
சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை தேனுடன் கலந்து சிகிச்சை
செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். அதிலிருந்து ஆப்பிள் சீடர் வினிகர்
பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள
புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது. மேலும் கிருமி
நாசினியாகவும் பயன்படுத்தக்கூடியது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள
அசிட்டிக் அமிலம் இரைப்பைக் குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும்
பூஞ்சைகளை போக்க வல்லது. மேலும் இது குடலில் உணவு செரிமானத்திற்கும்,
ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள
பெக்டின் (Pectin) என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து
நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு
அப்புறப்படுத்துகிறது.
இப்போது அந்த ஆப்பிள் சீடர் வினிகர், உடலுக்கு வேறு எந்த நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று பார்ப்போம்.
இளநீர்
இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.
மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.
நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..
உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.
பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.
காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.
பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.
காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.
மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.
நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..
உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.
பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
வயிற்றுப் பொருமல் மந்தம் உணவு செரியாமை பெருங்குடல் வீக்கம் ஈரல் கோளாறு குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.
காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.
பித்தக் கோளாறு பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.
காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.
Sunday, July 21, 2013
நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?
நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய்,
வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய்
உள்ளது.
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு
வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத்
தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை,
அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில்
அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி,
பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய்
இருக்கின்றது
கிராம்பு:
கிராம்பு:
கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு,
இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில்
பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.
என்ன சத்து?
கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு,
நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம்,
பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை
உள்ளன.
என்ன பலன்கள்?
கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல்
உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப்
பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும்,
வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த
ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால்
வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள்
வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு
சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும்
சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
சருமப் பிரச்னைகளுக்கு -
கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது
தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல்
செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.
சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்
பலாக்கொட்டை
பலன் தரும் பலாக்கொட்டை.
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான
அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது
நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா
மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள்
நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை
அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு
ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல்
தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான்
பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட
மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக
உட்கொள்ள ஏற்றது.
100 கிராம்
பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள்,
கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில்
காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல்
முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை.
இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின்
போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும்
குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு
வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.
பலாக்கொட்டையை
வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து,
கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம்.
தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து,
தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்,
மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய
அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி
மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய்
சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும்
உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை
மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும்
வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள்
குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது
இவரால்: தமிழா நீ ஒரு சகாப்தம்
அரளிச்செடி
அரளிச்செடி
எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே
பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ
நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை
கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும்
வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக்
கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம்
போன்றவற்றை விரைவில் குணமாகும்.
இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம்,
பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த
மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப்
பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி
விடக்கூடும்.
வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான
வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட
போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை
சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம்
தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய
குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.
அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம்,
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை
உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால்
அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு
ஆச்சரியமான செய்தி.
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது
நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும்,
செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும்
முக்கியமாகும்.
நித்தியகல்யாணி
புற்றுநோயை குணப்படுத்தும் நித்தியகல்யாணி . . .
மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தாவரம்
நித்திய கல்யாணி. இது களர், மற்றும் சதுப்பில்லாத நிலத்திலும் வளரும். இது
எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையது. தமிழகமெங்கும் தானே
வளர்கிறது. அழகுத் தாவரமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.பல காலமாக இதை
வணிக ரீதியாகப் பயிரிடுகிறார்கள்.
நித்தியகல்யணியின் பிறப்பிடம்
மடகாஸ்கர். மேலும் இந்தோனேசியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா மற்றும்
அமெரிக்காவில் பரவியுள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா,
அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் குஜராத் ஆகிய மாநிலங்களில்
பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது
நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில்
சாகுபடி செய்யப்படுகிறது.
ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது
இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய
குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை
உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில்
மதுக்கரை, முதலிய பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின்
இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் . . .
ஆல்கலாய்டுகள், வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின், அஜ்மாலின், ரவ்பேசின்
(Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)
மனநோய்களை குணமாக்கும் . . .
இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின்
போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடி நடையைச்
சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப்
பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்
படுத்தப்படுகிறது.
புற்றுநோய்க்கு மருந்து . . .
இதில்
உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில்
வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும்.
லுக்கேமியா மற்றும் லும்போமா புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளில்
நித்தியகல்யாணியில் உள்ள ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. இதில் உள்ள
அஜ்மாலின் கூட முக்கியமான வேதிப்பொருளாகும். ரவ்பேசின் (Raubasin)
செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) இது தவிர மருந்து
செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து
கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து
கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும்
குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
நீரிழிவுநோய் கட்டுப்படும் . . .
நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி
கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக
சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி
என்றாலும், பசியின்மையும் தீரும். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு
மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை
எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர்ச் சர்கரை
குறைந்து நோய் கட்டுப்படும்.
வருமானம் தரும் நித்யகல்யாணி . . .
நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செடி
வளர்ந்து 6 வது,9 வது மற்றும் 12 வது மாதங்களில் இலைகளைப் பறித்து
பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். பின் 12 வது மாதத்தில் தரைமட்டத்தில்
செடியை அறுத்து விட்டு வேர்கள் உழுது எடுத்துப் பதப்படுத்தி
வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா
ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி,
நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.
வேப்பம்பூ
வேப்பம்பூ
தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு
வேப்பம்பூ குடல் பூச்சிகளை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகமாக்குகிறது.
வேப்பம்பூ ரசம்
சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள்
நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றும். ரத்த ஓட்டம்
சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த
முடியும்.
சர்க்கரை நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள
வேண்டும். வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு
சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில்
உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி
கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ
எடுத்துகொள்ளவேண்டும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவுகள் !!!
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவுகள் !!!
பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் எளிதில்
ஜீரணமாகும் படியான உணவுகளையே கொடுக்க விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான
உணவு தயாரித்தலில்திட்டமிடுதல் என்பது தேவைப்படுகிறது. அதிலும் வேலைக்கு
செல்லும் பெற்றோர்களுக்கு, கடினமான வேலைக்கு நடுவில் குழந்தைகளை, பள்ளியில்
இருந்து சரியான நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வருவதே கடினமாக இருக்கும்.
அதனால் வீட்டிற்கு வந்ததும் பதப்படுத்தப்பட்ட உணவான மாக்ரோனி மற்றும் சீஸ்
அல்லது பீட்சா போன்ற உணவுகளை மட்டுமே ஒவ்வொரு உணவு நேரத்திலும் குழந்தைக்கு
உணவிட முடிகிறது. அதற்காக கவலை பட தேவையில்லை. ஏனெனில் அந்த மாதிரியான
நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வண்ணமயமான, சுவையான
மற்றும் சத்துக்கள் நிரம்பிய சூப்பர் உணவுகளான முட்டை, நட்ஸ், பழங்கள்
போன்றவற்றைக் கொடுக்கலாம். ஒரு பெற்றோர் என்ற முறையில், ஒருவர் தன்
குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அதே
நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கான சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.
அதிலும் சூப்பர் உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள்,
தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள்,
கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் ஏராளம் உள்ளன. ஆகவே இப்போது
குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளைக் கொடுத்தால் நல்லது என்பதைப்
பார்ப்போம்.
முட்டை
முட்டையில் புரதச்சத்து அதிகம்
நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவைகளில் கால்சியம் மற்றும் அவற்றை
உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே
இந்த முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம்
பசியெடுக்காமல் இருக்கும்
ஓட்ஸ்
ஆராய்ச்சி ஒன்றில் எந்த
குழந்தைகள் ஓட்ஸை சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு
நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று சொல்கிறது. எனவே
நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், ஓட்ஸ் போன்றவைகளை குழந்தைகளுக்கு
கொடுத்தால், அவை மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு
வழங்கும்
பழங்கள்
பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில்
கூட நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு பெர்ரிப்
பழங்கள், முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவைகள் மிகவும் சிறந்த
பழங்களாகும்.
நட்ஸ்
நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம்
, அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை
மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக
இருக்கும. அதிலும் காலையில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை
குழந்தைகளுக்கு கொடுத்தால், அது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவி
புரியும். குறிப்பாக நட்ஸில் பேரிச்சம் பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப்
பொருள்
பால்
பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம்
நிறைந்துள்ளது. மேலும் இந்த உணவுப் பொருள் குழந்தையின் மூளை மற்றும்
உடலுக்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது. மேலும் பாலிலுள்ள கால்சியம்,
குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே
நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.
பசலை கீரை
பசலை கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான
இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி
போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால்
மிகவும் நல்லது.
தயிர்
கால்சியம் மற்றும் புரதத்திற்கு
ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான
எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.
முழு தானியங்கள்
முழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம்
மற்றும் வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே
தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகளை நன்கு
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். அவைகளில் ஒமேகா-3
கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் மூளை
செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.
முட்டைக்கோஸ்
குறுக்குவெட்டுதோற்றத்தையுடைய காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு
பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை
குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது
அப்படியே திண்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல
உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்
சீனி அவரைக்காய் (எ) கொத்தவரங்காய்
சீனி அவரைக்காய் (எ) கொத்தவரங்காய்
என்ன சத்துக்கள்?
நார்ச்சத்து, புரதச் சத்து, மற்றும் அமினோ அமிலங்கள் இதிலுள்ளது.
பலன்கள்
சர்க்கரை நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால்
குறையும் அதனுடன் பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும்
என்கிறது ஒரு ஆராய்ச்சி.
நார்ச்சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக்
குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும்
அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள
உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே
கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான
திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாமல்,
மலத்திற்குப் போய் உடம்பிற்கு வெளியே போய் விடுகிறது.
செவ்வாழைப்பழம்
வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு
ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு
செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை
சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி
ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும்
என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும்
கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில்
உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும்
காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம்
பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க
நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா
கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம்,
உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின்
'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில்
50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய
ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர்
தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம்
குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு
செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த
நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை
தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு
கட்டுப்படும்.
தேநீர்
தேநீரில் இருக்குது பல நன்மைகள்...
டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். டீ சாப்பிடுவது நல்லதல்ல
பகலில் கறை பிடிக்கும். பசியை குறைக்கும் என்றெல்லாம் பலர் சொல்வதுண்டு..
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால்
உண்மையில் ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினை விட மூன்றில் ஒரு
பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை தேநீரில் காபின் உள்ளது. சரியான அளவில்
காபின் எடுத்துக்கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன
அழுத்தத்தை குறைக்கும்..ஞாபகசக்தியை அதிகரிக்கும்..
மேலும்
தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை
கொண்டது.. மண்ணில் இருக்கும் ப்ளோரைடு டீச்செடி உறிஞ்சி எடுத்து தனது
இலைகளில் சேமித்து வைக்கிறது.
எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்றது.
பற்களில் காரை படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க புளோரைடு உள்ள
பற்பசையை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை..டீ குடித்தாலே போதும்..
வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை..உண்மையில்
கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும் போது அது அல்சருக்கு எதிரான
நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன..எனவே
ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.
வயதான பெண்கள் மத்தியில்
நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ
குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை
காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் பெரும்பாலும் இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே
குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் தேவையில் 21
சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டீ பிரியர்களாக இருந்து
இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே
டீயை குடியுங்கள்.. சாப்பாட்டுக்கு பின்பு டீயை குடிக்க வேண்டாம். தேநீர்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல்
நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட்ட தேநீர் உதவுகிறது.
டீ
குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை
சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி
என்பதே இல்லை, மிகச்சிறந்த இயற்கை உணவுப்பொருட்களில் டீயும் ஒன்று..
ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும்
தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும் செரிமான
உறுப்புகளுக்கும் சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.
உடல்
எடை குறைதல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கும் தேநீர்
ஏற்றது. தேநீர் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும்
திகழ்கிறது. தினந்தேறும் 3 முதல் 4 கப் தேநீர் பருகுவது ஆரோக்கியமானது.
அமுக்கரா கிழங்கு
அமுக்கரா
கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா
லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,சூரணம் என பலரும் அறிந்திருப்போம்.
இது
உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு
அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி
விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும்
வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது.
தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனில் குழைத்தோ,அல்லது பாலில் கலந்தோ
காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், காசம்,பசியின்மை,மூட்டு
வலி,ஜீரணக்கோளாறுகள்,உடல் வீக்கம்,முதுமைத்தளர்ச்சி ஆகியவை நீங்கும்,
படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கம் வரும், உடலில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சி
இருக்கும்.காமம் பெருக்கும்.
அமுக்கரா சூரணம் 10கிராம், கசகசா
30கிராம், பாதாம் பருப்பு 10கிராம், ,சாரப்பருப்பு, 5கிராம்,
பிஸ்தாப்பருப்பு 5கிராம் என இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி அரைத்து
200மிலி பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து 90 நாட்கள் வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர காணாமல் போன இளமை மீண்டும் நம் உடலில் குடி புகும்.வயாக்ரா
என்பது செயற்கை, அமுக்கரா இயற்கை நமக்கு கொடுத்த கொடை.பக்க விளைவுகள்
இல்லாதது.
எளிய மருத்துவ குறிப்புக்கள்
உடல் எடை கூடஅதிகரிக்க:
பூசினி விதையின் பருப்பை எடுத்து நன்கு பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை அனைத்தும் குணமாகும்.
வெளுத்த தலை முடி கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் தொடர்ந்து பூசி வந்தால் தலை முடி கறுத்து வளரும்.
தொண்டை இரும்பல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டு வந்தால் தொண்டைஇரும்பல் நிவர்த்தியாகும்.
வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய அனைத்தையும் அரைத்த விழுதை எலுமிச்சை
அளவு எடுத்து பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வர கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
உடல் சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமமான அளவு எடுத்து சூடுபடுத்தி அதில்
வெந்தயத்தை பால் எடுத்து சேர்த்து தைல பதமாக காய்ச்சி அதை தலையில்
தோய்த்து வந்தால் சகல சூடுந்தணியும். தேகம் குளிர்ச்சியாகும்.
மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து
உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் குழைத்து உண்டுவர
உள்மூலம் தீரும்.
கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை இரு வேளை பசும்பாலில் 15 நாள் தொடர்த்து சாப்பிட வர இந்த பிரச்சினை தீரும்.
இருமல் தீர:
இலவங்கப்பட்டை 1ஸ்பூன் , வால்மிளகு 1 / 4 ஸ்பூன்பொடித்து 3 வேளை நெய்யில் குழைத்து சாப்பிட்டு தர இருமல் தீரும்.
காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை எடுத்து பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
அவரை.
அவரை.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால
சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச்
சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்
.*
அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும்.
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ
குணங்களை கொண்டுள்ளது.
*
அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல
சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள்
விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால்
இளைத்த உடல் தேறும்.
* அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன்
சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால்
உடல் வலுப்பெறும்.
* நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும்,
விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது
உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும்.
சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
* பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்
. * அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து
கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை
அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
* அவரைப்
பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய்
உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
* காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.*
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு
நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை
கட்டுப்படும்.
* மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை
நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம்
சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்*
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை
வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.*
சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய்
சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.முற்றிய அவரைக்காயை உணவாக
சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய்,
முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல்
பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
தயிர்
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது.
தயிர் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும்.
தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும். தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட மருத்துவர்கள் சொல்வது இதனால்தான்.
அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.
பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.
மெனோபாஸ் எட்டப் போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன.
தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து.
குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.
மலம் கழித்த பின்னர் சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும்.
தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை அதிகம் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தும். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக சாப்பிடும் போது தயிரை தவர விட்டுவிடாதீர்கள்.
தூதுவேளை
யுவான் சுவாங்
இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை
விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார்
வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற
பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும்
காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது
கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு வலு கொடுத்து
அறிவாற்றலை அதிகரிக்கும்.
2.இலைச்சாற்றை காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்புருக்கி,மார்புசளி நீங்கும்.
3.காயை தயிர்,உப்பில் ஊறவைத்து பதப்படுத்தி வறுத்து உண்டுவர இதய பலவீனம்,மலச்சிக்கல் தீரும்.
4.இதன் முழு சமூலத்தையும் 50கிராம் அளவு நீரில் காய்ச்சி கஷாயமாக காலை,மாலை அருந்திவர இரைப்பு,சளி,இருமல் தீரும்.
5.பத்து அல்லது 12 தூதுவேளைப்பூக்கள் எடுத்து பாலில் காய்ச்சி ஒரு மண்டலம்
சாப்பிட்டுவர உடல் பலம், முகத்தில் வசீகரமான அழகை பெறலாம்.
6.தூதுவேளை,பற்படாகம்,விஷ்ணுகிர ந்தி,கண்டங்கத்திரி
இவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி 8 ல் ஒரு
பங்காக சுண்ட செய்து கிடைப்பது தூதுவேளை குடிநீர்.இதனை ஒரு மணிநேரத்துக்கு
ஒருமுறை 10மி.லி கொடுத்துவர நிமோனியா,டைபாய்டு போன்றவை குணமாகும்.
தெருமுனையில் வெய்ட் பண்ணறேன்,ஒரு கைப்பை எடுத்துக்கொண்டு வாங்க,தூதுவேளை பறிக்க போகலாம்
“காட்டு ஆத்தா” (முள் ஆத்தன்காய்) (சில மாவட்டங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்” என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
இந்த பழம் பெருமளவு இலங்கையில் கிடைகிறது !!! (Sour sop fruit )
நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு
மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப
கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால்
ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு
தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப்
பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள்
மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும்
மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு
சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும்
சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும்
செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல வகைகளில் உருவாகி
மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான
உறுப்புகளை தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே
இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து
புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும்
உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய்
வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன.
ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம்
இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன்
கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக
“காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம்,
புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000
மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப்
புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு
சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின்
அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும்,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
இலங்கை மற்றும்
வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு
பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற
நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை
தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில்
ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக
மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் "முள்
ஆத்தன்காய்" என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான
மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.
இதன்
மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில்
பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும்.
இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை
நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான
ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ்
மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற
சத்துக்களும் நிறைந்துள்ளன.
இலங்கை: “காட்டு ஆத்தா” (முள்
ஆத்தன்காய்) (சில மாவட்டங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்”
என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: “Soursop”, “Prickly Custard Apple”, “Soursapi”
பயனுள்ள இயற்க்கை மருத்துவ குறிப்புகள்
1.
வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப்
பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும்
சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு
காணலாம்.
3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.
9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.
கொய்யா
கொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும்..
பழங்களிலேயே விலை குறைவானதும்,
அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதும்,
அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதுதான் கொய்யா.
முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும்.
மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும்.
கசாயம் வாந்தியினை தடுக்கும்.
ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.
கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப்
போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.
கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது.
இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.
அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.
உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன.
இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.
முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது.
முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும்.
மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால்,
பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை
வெளியேற்ற மிகவும் உதவுவதாக
சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.
சாப்பிட்ட பின்போ,
அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ,
சாப்பிட நல்லது.
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.
இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும்.
தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு.
ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.
வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.
சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.
கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும்.
அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து
வாந்தி மயக்கம் ஏற்படும்..
நன்றி..
இயற்கை வைத்தியம்.,
உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
உடல் நலம் காப்போம்..!
நோயின்றி வாழ்வோம்..!!
கறிவேப்பிலை
"என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….
கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:
கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது
மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம்
கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக்
கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது
புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும்
கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம்
தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி
தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.
கண்பார்வை குறைவு ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால்
நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது
குறையும் என்றும் கூறுகிறார்.
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10
கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு
மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக
குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.
கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..
சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை
பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல்
இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது
தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த
எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி
உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.
கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல்
ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும்
பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
வாந்தி,
நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும்
உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள்
ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை
உதவுகின்றது.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை
அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத்
துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.
வெந்தயம்
சர்க்கரை வியாதிக்கும் கொலஸ் ற்றாலுக்கும் மருந்தாகும் வெந்தயம்
சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில
பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை
முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.
*
ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு
12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய
உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்
* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து
தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட
விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி,
இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள்
செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது
விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.
* இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
* இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற
உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம்,
இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.
* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.
* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற
சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்। இப்படி
பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.
*ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.
சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz
பொன்னாங்காணி
கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி
அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …
சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.
இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.
பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு.
அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.
பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு.
இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது.
மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல
அருங்குணங்கள் கொண்டது.
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
பொன்னாங்காணியின் பயன்கள் :
இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.
இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம்
கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால்
இரத்தம் அசுத்தமடைகின்றது.
பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி
சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு,
மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த
இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
அதிக
வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து
வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து
காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.
கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி
இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10
கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய்
எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.
பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும்
மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக
பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி
பெருகி நல்ல பலம் சேரும்.
பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய்
வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு
நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப்
போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை
தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல்,
மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால்
2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள்
காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து
சிறுநீர் போகுதல் குணமாகும்.
உடலில் உண்டாகும் வெப்பத்தின்
மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக
ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே
இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து
கட்டி எனப் பேசுகிறது.
இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று
மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும்
இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து
உபயோகிக்கவேண்டும்.
ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது.
குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.
கருஞ்சீரகம்
கருஞ்சீரகம்
குளிர்ச்சியால்
ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை
வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள்
விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை,
மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத்
தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக்
கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு
நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி
உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத்
தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை
அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக்
(vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன்
கிடைக்கும்.
கரும்பித்தம்
மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின்
தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி
எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி,
பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற
நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன
Saturday, July 20, 2013
எளிய பாட்டி வைத்தியம்
எளிய பாட்டி வைத்தியம்
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை
வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு
நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி,
அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்
கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
8.
குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும்.
மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
12. சீதபேதி மலைவாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை
சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி
மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து
தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்
குணமாகும்.
16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து
தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில்
போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு
வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
20. வரட்டு இருமலுக்கு எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
Subscribe to:
Posts (Atom)